கோட்டூர்புரம்–எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்குபழனிமருத்துவபரிசோதனைக்குஒத்துழைக்காததால், அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்வீட்டிற்குதிருப்பிஅனுப்பப்பட்டநிலையில்,அன்றைக்குஇரவேபழனிமரணம்அடைந்தார்.இந்தசம்பவம்தொடர்பாகபழனியின்தந்தைரங்கநாதன்என்பவர்புகார்அளித்தார்.காவல்துறையினர் மீதான புகார் என்பதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, இது சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.விசாரணை அறிக்கையில், காவல்துறையினர் தாக்கியதால் தான், பழனி மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கோட்டூர்புரம் SI ஆக இருந்த ஆறுமுகம், தலைமை காவலர்களாக இருந்த மனோகரன், ஹரிஹர சுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு காவலர்கள் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.