fbpx
RETamil Newsதமிழ்நாடு

150 நாட்கள் பள்ளிகளில் விடுமுறை கொண்டாட்டம்: செம மகிழ்ச்சியில் மாணவர்கள் !

2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 150 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 215 நாட்களிலும் 5 நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு குறைவான நாட்கள் இருந்தால், சனிக்கிழமைகளில் பணியாற்ற வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் சனிக்கிழமையன்று பாதி நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 2019-ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை என கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில், பணி நாட்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான 150 நாட்கள் விடுமுறை குறித்த அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஜனவரி – 11 நாட்கள்

பிப்ரவரி – 7 நாட்கள்

மார்ச் – 9 நாட்கள்

ஏப்ரல் – 16 நாட்கள்

மே – 31 நாட்கள்

ஜூன் – 10 நாட்கள்

ஜூலை – 7 நாட்கள்

ஆகஸ்ட் – 11 நாட்கள்

செப்ட்ம்பர் – 14 நாட்கள்

அக்டோபர் – 12 நாட்கள்

நவம்பர் – 8 நாட்கள்

டிசம்பர் – 14 நாட்கள்

இந்த அட்டவணையின்படி, மொத்தம் 365 நாட்களில் 215 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். இதிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் பண்டிகை மற்றும் மழைக்கால விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, மகிழ்ச்சியாக அமையும். ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 47 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கிறது. கோடை விடுமுறையில், பொது தேர்வுக்கான விடை திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தனியாக ஊதியம் தரப்படுகிறது.

 

Related Articles

Back to top button
Close
Close