fbpx
HealthTamil News

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !

“ஆஸ்ட்ரோஜன்” எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4-ல் 3 பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கபடும் இது, புற்றுநோய் செல்கள் வள்ர்வதை தடுக்கிறது. மாதுளம்பழத்தில் பைட்டோகெமிக்கல், அஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனை கட்டுபடுத்துகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமான செல்கள் மற்றும் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது என புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது புற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையின் மருத்துவ குணங்கள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close