சட்டப்பேரவையில்…பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை….

சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் பேசும்போது, ‘கனிமவளங்களை முறைகேடாக எடுத்தவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடுத்து,தண்டனைவழங்குவதற்குதமிழகஅரசுமுன்வரவேண்டும்’’என்றுகூறிவிவாதத்தை தொடங்கிவைத்தார்.அதைத்தொடர்ந்துநடைபெற்றவிவாதம்வருமாறு:அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: மாநிலத்தில் உள்ள கனிம வளங்கள், குவாரிகள் மற்றும் மலைகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பினாமி கட்டுப்பாட்டில் உள்ளன.அரசு நடவடிக்கை எடுத்து குவாரிகளுக்கு சீல் வைத்தால், அவர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்துகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நிலையில் அரசியலுக்கு வந்தவர்கள், இன்று மெடிக்கல் மற்றும் இன்ஜினீயரிங் கல்லூரிகள், பிரம்மாண்டமான பங்களாக்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்ஒருவர்குவாரிகளைகட்டுப்பாட்டில் வைத்திருந்ததாலேயே கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்தார்.(அமைச்சரின் இந்தப் பேச்சால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு தவெக உறுப்பினர்களும் எழுந்து குரல் எழுப்பியதால் பெரும் கூச்சல் குழப்பம்நிலவி,அவைபோர்க்களமாககாட்சியளித்தது.அதன்பின்தவெக,திமுகஉறுப்பினர்களை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் சமாதானம் செய்தார்.) அமைச்சர்என்.ஆனந்த்: அமைச்சர் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. அப்படி இருக்கும் போது திமுகவினர் ஏன் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?.திமுக கொறடா எ.வ.வேலு: மதுரையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தோல்வியுற்றார் என்று கூறிவிட்டு, யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்று சொல்வது எப்படி நியாயமாகும்? அமைச்சர் ஆதவ் எப்போதும் பொதுக்கூட்டம் மாதிரி பேசுகிறார்.ஆனால், சட்டப்பேரவையில் பொத்தாம் பொதுவாகப் பேசக்கூடாது. அதற்கான ஆதாரங்களை அவையில் சமர்ப்பிக்கவேண்டும். .அமைச்சர் ராஜ்மோகன்: விமர்சனங்களை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அவை மரபுகளை மீறி, ஒருமையில் பேசுவதும், நாகரிகமற்ற முறையில் சைகைகள் செய்வதும் கண்டிக்கத்தக்கது.த்த உறுப்பினர்கள், தங்கள் கட்சியினருக்கு அவையில் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிதர வேண்டும். தவெக அரசு எந்த மிரட்டலுக்கும் பயப்படாது.பேரவைத் தலைவர் பிரபாகர்: சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து வருகிறேன்.ஆனால், கடந்த 2 நாட்களாக சில உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளைத் தாண்டி, எல்லைகளை மீறி நடந்து கொள்வதும், காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளைப் பேசுவதும் மிகுந்த மனவருத் தத்தை அளிக்கிறது.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பும் மரபைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளது. இனி ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மட்டுமேஅவையில் நடைபெற வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி பிரச்சினைகளை உருவாக்கக்கூடாது.இடத்தை விட்டு வெளியே வருபவர்கள், இருக்கையில் அமர்ந்தபடியே தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.எ.வ.வேலு: எதிர்க்கட்சியினர் மீதுஅமைச்சர்கள்பொத்தாம்பொதுவாகக்குற்றச்சாட்டுகளைவைத்தால்,அதுஎதிர்வினையைத் தூண்டும். உதாரணத்துக்குமதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்று குறிப்பிட்டு பேசினால், அது யாரைக் குறிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.எதிர்க்கட்சியின் பணி கேள்வி களைக் கேட்பதும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதும்தான். அதற்குப் பொறுமையாக பதிலளிக்க வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை. இவ்வாறு விவாதம் நடை பெற்றது. தவெக – திமுக இடையிலான இந்த வார்த்தை மோதலால், சட்டப்பேரவையில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.