சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரமாக செயல்படுவருகிறது–தமிழக காவல்துறை…
கடந்த ஒரு வாரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தன. மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கண்டுபிடித்து, பாதுகாப்பாகஅவர்களதுகுடும்பத்தினரிடம்ஒப்படைத்துள்ளனர்.பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர்.மேலும், தமிழகம் முழுவதும் குற்றங்கள் நடைபெறவாய்ப்புள்ளதாகஅடையாளம்காணப்பட்ட12,577பகுதிகளில்கண்காணிப்புமற்றும்ரோந்துப்பணிகள்தீவிரப்படுத்தப்பட்டன.மேலும் கடந்த ஒரு வாரத்தில் அறிவுசார் குறைபாடுடைய 5 பேர் மீட்கப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய 53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.