மாதவரம் M.L.A தவெக எம்.எல். விஜய் பிரபு — சிறப்பு செய்தி
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சோழவரம், வில்லிவாக்கம் வட்டாரம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
செங்குன்றம், அக்டோபர் 27:சோழவரம் வட்டார வில்லிவாக்கம் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு மாதவரம் தொகுதி பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலய மகா மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் தவெக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டச் செயலாளருமான எம்.எல். விஜய் பிரபு தலைமையில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் 220 நிறைமாத கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல், மாலை அணிவித்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி தலைமையுரை ஆற்றினார்.மாவட்ட திட்ட அலுவலர் ஏ.கலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.முன்னதாக சோழவரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கே.புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். வில்லிவாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா அனைவருக்கும் நன்றி நவின்றார்.இந்நிகழ்வில் 220 கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது குடும்பத்தினர், சோழவரம் , வில்லிவாக்கம் வட்டார நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள், தமிழக வெற்றி கழக மாவட்ட, பகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து 220 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக வெற்றி கழக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய் பிரபு ஏழு வகையான உணவினை பரிமாறி, கர்ப்பிணிப் பெண்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.