Others

இரண்டு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நடுரோட்டில் தாக்கி கொண்டனர்….?

கோவையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியால், இரண்டு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர், கோவை பீளமேடு பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகளின் ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டது, பேருந்துகளை இயக்கும் நேரம் மற்றும் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியால், இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போக்குவரத்து நிறைந்த சாலையில் பேருந்துகளை நிறுத்திவிட்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பேருந்துகளில் பயணிகள் இருந்ததையும், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மோதலில் ஈடுபட்டார், இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது, மேலும் இசம்பவத்தை அறிந்த பீளமேடு போலீசார் இரண்டு பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களையும் போக்குவரத்துக்கு இடையுராக செயல்பட்ட வகையில் அவர்களை கண்டித்து அப்பகுதியில் போக்குவரத்தை சரிசெய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close