பிரபல சமையல் கலைஞர், செப் தாமு காலமானார் வயது 72…
பிரபல சமையல் கலைஞர், செப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒருவாரமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தாமு. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி (அக்., 25) காலை மறைந்தார்.தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார். உலகின் பலவகையான உணவுகளையும் சமைத்து அசத்தி உள்ளார். 2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.2004-ல் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார். சமையல் கலையில்இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.சமையல் தாண்டி சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். தவிர சமையல் நிகழ்ச்சியையே கலகலப்பாக வழங்கும் விஜய் டிவியின் ‛குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதன்மை நடுவராகவும் திகழ்ந்தார். இதன்மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். ‛கள்ளப்படம், ஒரு பக்க கதை’ உள்ளிட்ட ஓரிரு படங்களிலும், வெப்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.செப் தாமுவின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.