fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கொரோனா இறப்பு விகிதங்களை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு…!

Steriod medicine discovered for corona

லண்டன்:

டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். அதாவது 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். இந்த கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் பல நாட்டு விஞ்ஞானிகளும் களம் இறங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் சில மருந்துகள் நோயை கட்டுப்படுத்த பயன்படுகின்றன.

அந்த வகையில் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு கொரோனா பலிகளை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெகவரி என்னும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ குழு இந்த மருந்தை நோயாளிகளிடம் பயன்படுத்தியது.

அதில் மூன்றில் ஒரு பங்கு பேர் இறப்பிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விரைவில் அது பற்றிய விவரங்களை வெளியிட உள்ளதாக அந்த மருத்துவ குழு கூறி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close