ராணிப்பேட்டை-உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது..

தமிழக அரசின் உத்தரவின் படி எதிர் வரும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.வாலாஜா நகராட்சி ஆணையாளர் இளையராணி உத்தரவின்படி மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் உப்பு சக்கரை கரைசல் நீர் பொதுமக்களுக்கு வாலாஜா நகராட்சி சுற்றியுள்ள காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், தபால் நிலையம், இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆகிய இடங்களில் உப்பு சக்கரை கரைசல் நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதனை மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட பூச்சியில் வல்லுநர் டாக்டர் விஜயகுமார் நேரில் வருகை தந்து அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட இடங்களில் உப்பு சக்கரை கரைசல் சரியாக வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிகழ்வினை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி களப்பணி உதவியாளர் வாசு மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தனர் இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறும் போது தற்போது தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் 12 மணி முதல் 3 மணி வரை வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளுமாறும் உடலில் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வகையில் அதிகப்படியான நீர் அருந்தவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், பழச்சாறு, மோர் போன்றவற்றை அருந்தவும் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க வீட்டிலேயே பொதுமக்கள் ஒரு லிட்டர் தண்ணிக்கு மூன்று சிட்டிகை சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு சுத்தமான ஒரு லிட்டர் நீரில் கலந்து வீட்டில் உள்ள அனைவரும் பருகி இந்த கோடைகால வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கினார்.