fbpx
Others

தடகளத்தில் தடம் பதித்த தலைமைக்காவலர் அன்னபூரணம்–சிறப்புசெய்தி..

 

கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம். இவர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பசும்பொன் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு காவல் துறையில் 25 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர், சிறுவயது முதலே கடினமான சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். பள்ளி செல்லும் காலம் முதல் தடகளத்தில் ஆர்வம் கொண்டவர், தமிழ்நாடு காவல் துறையில் சேர்ந்த நாளிலிருந்து பல்வேறு தடகள போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அளவில் இரண்டாமிடமும் , மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது ஆசிய அளவிலான தடகள போட்டிகளில் கலந்துகொண்டுவருகிறார். இவருக்கு காவல்துறையின் சார்பில் பாரட்டுக்கள் குவிந்துவருகிறது. சமிபத்தில் கோவை மாவட்ட துணை ஆணையர் சுஹாசினி நேரில் அழைத்து பாரட்டுகளை தெரிவித்தார். தடகள போட்டிகளில் மொத்தமாக இவர் 18 கோப்பைகளில் 4 வெள்ளியும், 9 பதக்கங்களில் 2 வெள்ளி மற்றும் 1 தங்கம் வென்றுள்ளார். இது குறித்து காவலர் அன்னபூரணம் தெரிவித்ததாவது, சிறுவயதிலிருந்து தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், தன்னை தற்போது இந்த வெற்றியை அடையவைத்துள்ளது, எனது குடும்பத்தினர், ஊர்மக்கள், நண்பர்கள், உடன்பணிபுரியும் சக காவல்துறை நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்திவருகிறார்கள், தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் மேலும் பல பதக்கங்களை வென்று தருவதோடு மட்டுமின்றி, வெளிநாட்டு போட்டிகளில் பங்கு பெற்று சாதிப்பேன் என்று தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close