விரைவில் ரெயில் மெய்சிலிர்க்க வைக்கும் பயணம் –செனாப் ஆற்றுப்பாலம்
ஜம்மு காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதைதிட்டம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படவேண்டியுள்ளன.அந்தப்பணிகளும்விரைவில்நிறைவடைந்து ரெயில் போக்குவரத்தை ஜனவரி 26-ம் தேதி பிரதமர்மோடிதொடங்கிவைப்பார்எனஎதிர்பார்க்கப்படுகிறதுஇமயமலையில் சவால் நிறைந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ரெயில் பாதையில் 38 இடங்களில் 119 கி.மீ.நீளத்துக்கு மலைகளைகுடைந்துசுரங்கப்பாதைகள்அமைக்கப்பட்டுஉள்ளன.இதில்,ஒருசுரங்கப்பாதைமட்டும்12.75கி.மீ.நீளம்கொண்டது.பள்ளத்தாக்குகள்வரும்பகுதியில்37இடங்களில்பாலங்கள்கட்டப்பட்டுள்ளன.இதில்,26பாலங்கள்பெரியது.ஒவ்வொருஇடங்களுக்குஇடையேபாதைப்பணிகள்முடிய..2005ஆண்டுமுதல்ரெயில்கள்குறிப்பிட்டபகுதிகளுக்குள்இயக்கப்பட்டுவருகின்றன.அந்தவகையில்,காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ரியாசி-சங்கல்தான் இடையே இமயமலையின் இரு பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றுக்கு மேலே
அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டவளைவுபாலத்தைஉள்ளடக்கிய வழித்தடத்தில்விரைவில்போக்குவரத்துதொடங்கஉள்ளது. ரூ1,486கோடிமதிப்பில்நிலைநிறுத்தப்பட்டு உள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் கூடுதல் உயரம். 17 ராட்சத தூண்கள் மீது 1,315 மீட்டர் நீளம், 15.2 மீட்டர் அகலத்தில் டெக்லா என்ற நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த பாலம். இந்தபாலத்தில்மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் செல்ல முடியும். மைனல் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். 8 ரிக்டர் அளவிலான பெரிய
நிலநடுக்கத்தையும் தாங்க வல்லது. 40 கிலோ எடை கொண்ட டி.என்.டி. குண்டுவெடிப்பையும் தாங்கி நிற்கும். மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் கடந்து போக செய்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்.செனாப் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்தநிலையில்அடுத்தடுத்துவெள்ளோட்டம்வெற்றிகரமாகமுடிந்துள்ளது.சமீபத்தில்கட்ரானிஹால்ரெயில்வழித்தடத்தில்பாதுகாப்புகமிஷனர்ரெயிலைஓட்டிஆய்வுசெய்துசெனாப்மேம்பாலம்போக்குவரத்துக்குதயாராகஇருப்பதைஉறுதிசெய்துள்ளார்.ஜனவரிமுதல்வாரத்தில் கட்ரா – பனிஹால் பாதையைமீண்டும்ஒருமுறைஆய்வுசெய்தபின் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள்நடைபெறும்.இந்தரெயில்வழித்தடம்முழுமையாகபயன்பாட்டிற்குவந்ததும்,ஜம்முமுதல்பாரமுல்லாவரை435கிமீதூரத்திற்குரெயில்போக்குவரத்துஇருக்கும்.சுரங்கப்பாதைகள்,மேம்பாலங்கள் மற்றும் செனாப் வளைவு பாலம் வழியாக ரெயிலில் பயணம் செய்வது, பயணிகளுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும்.