fbpx
Tamil Newsஉணவு

சுவையான சாம்பார் பொடி !

தேவையான பொருட்கள்:

சிவப்பு மிளகாய் -1/4 கிலோ
தனியா – 4 கப் அல்லது 350 கிராம்
துவரம் பருப்பு – 1 கப் அல்லது 250 கிராம்
முழு கருப்பு மிளகு – 1/2 கப் அல்லது 85 கிராம்
சீரகம் – 1/2 கப் 75 கிராம்
வெந்தயம் – 2 தேக்கரண்டி
மஞ்சள் – 10-12 துண்டுகள்
கடலை பருப்பு – 50 கிராம்
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
பெருங்காயம் தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

மிளகாய், தனியா, துவரம்பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் தூள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கல், தூசி அனைத்தையும் நீக்கி சுத்தம் செய்து சூரிய ஒளியில் உலர வைக்கவும். 2-3 நாட்களுக்கு உலர வைத்த பின்னர் வெறும் கடாயில் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆற வைத்து கொள்ளவும்.

மேற்கண்ட அனைத்தையும் மாவுமில்லில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இவற்றை ஒரு மூடி போட்ட டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும். 5-6 மாதம் வரை சாம்பார் பொடி கெடாமல் இருக்கும்.

சுவையான சாம்பார் சமைக்க வீட்டிலே தயாரித்த சாம்பார் பொடியை பயன்படுத்தி சமைத்து பாருங்கள் ருசியும் மணமும் என்றும் நிலைத்திருக்கும்.

Related Articles

Back to top button
Close
Close