Others

புதிய ஆன்லைன் நடைமுறைகளை தனியார் வசம் ஒப்படைத்ததை கண்டித்து போராட்டம்…

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனைதமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 3.0 மற்றும் e.hub என்ற புதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு, ஈ-டெண்டர் கோரியுள்ளது. புதிய ஆன்லைன் நடைமுறைகளை தனியார் வசம் ஒப்படைத்ததை கண்டித்தும்ஆவணஎழுத்தர்களின்வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் பத்திரம் எழுதுவோர் நலச்சங்கம் மற்றும் தட்டச்சர்கள் நலச்சங்கம் சார்பில் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.மாதவரம் தொகுதி செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே பத்திரப்பதிவு பணிகளை புறக்கணித்து, பத்திர எழுத்தர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆவண எழுத்தர்கள் அலுவலகங்களை திறக்காமல் இரண்டு நாள்கள் கடைகளை அடைத்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பத்திரப்பதிவு பணிகளை தனியார் மயத்திற்கு வழிவகுக்கும் ஸ்டார் 3.0 மற்றும் e.hub என்ற ஈ-டெண்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தமிழ்நாடு அரசு, பத்திரப்பதிவு பணிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close