fbpx
REஅரசியல்இந்தியா

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல்!

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தற்போது லோக் சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார்.

இன்னும் மூன்று நாட்களில் அவர் மேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்காக செல்ல வேண்டி இருந்தது. தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீர் என்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் லேசான வலியும், தொடர் இருமலும், மூச்சு பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவர்களால் சோதிக்கப்பட்டதில், அவருக்கு எச்1என்1 வைரஸ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

அதன்படி அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அமித் ஷாவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய தற்போதைய உடல்நிலை குறித்த எந்த ஒரு முழுமையான தகவலும் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button
Close
Close