fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

பொதுமக்கள் வெளியே போகவில்லை…! கொரோனா பரவல் குறைந்துள்ளது..! ராதாகிருஷ்ணன் தகவல்!

Health secretary radhakrishanan inspection

சென்னை:

முழு ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தை சரியாகப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 550 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் முன்பு 34 ஆயிரத்து 880 பேர் இந்த முகாமை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில் சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தொடர் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதலாக காய்ச்சல் முகாம்கள் நடத்தவும், ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் கூட சோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7.7 லட்சம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளை பொருத்தவரையில் தேசிய அளவில் ஆராய்ச்சி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஐ.சி.எம்.ஆர் அனுமதி பெற்று ‘பிளாஸ்மா’ சிகிச்சை சிறந்த முறையில் நடைபெறுகிறது. முறையான அனுமதி பெற்று ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த முழு ஊரடங்கு காலம் பயன் தந்துள்ளது. பொதுமக் கள் வெளியே அதிகம் செல்லாத நேரங்களில், பரவல் குறைந்துள்ளது. அதே வேளையில் சோதனைகளையும் அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்பகுதி மக்கள் முழுமையாக பின்பற்றுகிறார். அதே போல் மற்ற பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close