Others

கடற்கரை மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்பனையா….?

செங்குன்றம் அடுத்த புள்ளிலைன், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிகளில் கலப்பட மணல் குடோன்களில் அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி ஆய்வு! 5 குடோன் களுக்கு சீல் வைப்பு!!

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிகளில் உள்ள மணல் கிடங்குகளில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டி.கே. பிரபு ஆய்வு மேற்கொண்டார்.திரு​வள்​ளூர் மாவட்​டம் மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்​றிய பகுதி​கள் சென்​னைக்கு அருகிலா உள்ளபகுதி​களாகும். இப்​பகுதி​களைச் சுற்றியும்,மற்றும் சென்னையிலும் பல்வேறு புதிய குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.இந்​நிலை​யில் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திவாக்கம், புள்​ளிலைன் ஊராட்​சிக்கு உட்​பட்ட புள்ளிலைன், புதுநகர், ஆருண் உல்​லாச நகர் பகுதி​களில் செயல்​பட்டு வரும் மணல் யார்​டுகளில் பழவேற்​காடு மற்​றும் காட்​டுப்​பள்ளி கடற்​கரை பகுதி​களி​லிருந்து சட்​ட​விரோத​மாக கடற்​கரை மணலை எடுத்து வந்து, தரம் குறைந்த ஆற்று மணலுடன் கலந்து விற்​பனை செய்​யப்​படுவ​தாக சமூக ஆர்​லர்​கள் மற்​றும் பொது​மக்​கள் தரப்​பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்​சர் டி.கே.பிரபு, தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திவாக்கம், புள்​ளிலைன் ஊராட்​சிக்கு உட்​பட்ட புதுநகர், ஆருண் உல்​லாச நகர் பகுதி​யில் செயல்​பட்டு வந்த 19க்கும் மேற்பட்ட மணல் யார்​டுகளில் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார்.இந்த ஆய்வின் போது ட்ரோன் கேமரா மூலம் 19 இடங்களையும் பார்வையிட்டு அதிரடி ஆய்வு செய்து, செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த ஆய்​வின் போது, “காட்​டுப்​பள்ளி பகுதி​யி​லிருந்து உரிய அனுமதி​யின்றி, கடற்​கரை மணல் எடுத்து வரப்​பட்டு, 20அடிக்கும் மேல் உயரமாக யார்டுகளில் மலை போல் மடலா இருப்பு வைக்​கப்​பட்​டிருந்​ததும்,அந்த கடற்கரை மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்பனை செய்​யப்​படும் தகவல் தெரிய வந்தது.இதனையடுத்து, அமைச்​சர் பிரபுவின் உத்​தர​வின் பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் மணியரசன், திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ராமஜெயம், பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பிரபு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதி​காரி​கள் குழுவினர் சட்ட விரோத செயல்களால் தரமற்ற கட்டுமானம் மேற்கொள்வதை தவிர்த்திடும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் தரத்தினை ஆய்வு செய்து 19க்கும் மேற்பட்ட மணல் யார்​டுகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள மணல் கிடங்குகளை அரசே கையகப்படுத்திடமுடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்படம் மணல் தொடர்​புடைய​வர்​கள் மீது உரிய சட்ட நட​வடிக்கை மேற்​கொள்ளும் பணியையும் உடனடியாக மேற்கொண்டதோடு, மணல் கொண்டு வரப்பட்ட லாரியையும் செங்குன்றம் காவல் ஆய்வாளர். கிருஷ்ணமூர்த்தியிடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.சமூக ஆர்வலர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் பொழுது, பொதுமக்கள் பெரும்பாலோனோர் வீடு கட்டுவதற்கு ஆற்று மணலை வாங்கி கட்டுவதுதான் வழக்கம். இதுபோன்ற கலப்பட மணல் விற்பனைக்கு செயல்படாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதோடு, வருங்காலங்களில் கலப்பட மணல் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கலப்பட மணல் விற்பனை அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடைபெறப் போவதில்லை. எனவே அரசு அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இதுபோன்று கலப்பட மணல் விற்கின்றார்கள் என்று தகவல் தெரிந்தால் அரசியல் தலையீடு இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close