செங்குன்றம் INS கிருஷ்ணமூர்த்தியை பாராட்டியஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார்…
ஆவடி காவல் ஆணையர். செந்தில்குமார் உத்தரவின் படி, இணை ஆணையர் மருத்துவர். ஆர்.சிவக்குமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். கே.மகேஸ்வரி, செங்குன்றம் உதவி ஆணையர் (பொறுப்பு) விவேக் கண்ணன் அறிவுரையின் பேரில் செங்குன்றம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகராஜா, காவலர் வினோத்குமார் ஆகியோர் பாடியநல்லூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது தெலுங்கானா மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் சைதி ரெட்டி ஆகிய 2 நபர்கள் ரூ.50,00,000/- ஐ உரிய ஆவணமின்றி கொண்டு வந்தது தெரியவந்தது.எனவே அவர்கள் ஓட்டி வந்த கார், இரண்டு செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.50,00,000/- காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது.சென்னை சௌகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்வதற்காக தெலுங்கானா மாநிலத்திலிருந்து பணம் கொண்டுவந்துள்ளது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.இருப்பினும் தொடர்பாக முழு விசாரணை செய்ய வேண்டி சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார், செங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினரை பாராட்டினார்.