இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள். ..சிறப்பு செய்தி
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’,சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். வலிமையான, வளமான தேசத்தை உருவாக்குவதற்காக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்தார். பாரத மாதாவிற்கு அவர் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட தியாகமும் அர்ப்பணிப்பும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பெரும் ஊக்கமூட்டும் சக்தியாகத்திகழ்கின்றன”எனபிரதமர்மோடிகுறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி, திரவுபதி முர்மு; ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியத் தலைவராகவும், நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பிகளில் ஒருவராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தேசத்தை ஒன்றிணைப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றினார் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளை நாம் ‘தேசிய ஒற்றுமைதினம்’என்றுகொண்டாடுகிறோம்.வளர்ந்தஇந்தியாவைஉருவாக்கும்பணியில்அனைத்துக்மக்களும்தங்களைஅர்ப்பணித்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். துணை ஜனாதிபதி, சிபிஆர்; சர்தார் படேல் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய மகத்தான பங்களிப்பை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும்
முன்னேற்றப் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டும். தமிழக கவர்னர் அர்லேக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: சர்தார் வல்லபாய் படேல் பர்தோலியில் விவசாயிகளின் நலன் காக்க ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் மக்களால் அன்புடன் சர்தார் (தலைவர்) என்று அழைக்கப்பட்டவர். தாம் வழக்கறிஞராக வாதாடிக் கொண்டிருந்த சமயத்தில் தன் மனைவி இறந்த தகவல் வந்தும், விசாரணை முடிந்து வழக்கு வெற்றி பெற்றபின் அனைவரிடமும் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றவர். சுதந்திர போராட்ட காலத்தில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட போது காந்தியிடம் நெருங்கிய நட்பு கொண்டார்.விடுதலை பெற்ற பின்னர் தமக்கு காத்திருந்த பிரதமர் பதவியை காந்தியின் வேண்டுகோளின் படி நேருவிற்கு விட்டுக் கொடுத்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். சிதறிக்கிடந்த 565 சமஸ்தானங்களை மிகக் குறுகிய காலத்தில் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் கண்டவர். இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படுபவர். இந்திய நிர்வாகப் பணிகளை அறிமுகம் செய்தவர். நர்மதை நதியின் கரையில் உலகின் உயர்ந்த சிலையாக உருக்கொண்டிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த அக்டோபர் 31 அன்று போற்றி வணங்குவோம். இவ்வாறு அர்லேக்கர் கூறியுள்ளார். பிறப்பு: அக்டோபர் 31, 1875 (குஜராத் மாநிலம், கரம்சாத்) மறைவு: டிசம்பர் 15, 1950 வகித்த பதவிகள்: இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் முதல் துணைப்பிரதமர்.நாட்டுஒருங்கிணைப்பு:சுதந்திரத்திற்குப்பிறகுசிதறிக்கிடந்த565க்கும்மேற்பட்டசமஸ்தானங்களை இந்திய ஒற்றையாட்சிக்குள் இணைப்பதில் முக்கியப் பங்காற்றினார். சிவில் சர்வீஸ்: நவீன இந்திய ஆட்சிப் பணி அமைப்பின் (All India Services) தந்தையாகப் போற்றப்படுகிறார். பாரத ரத்னா: இவரது மறைவுக்குப் பின் 1991-ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. ஒற்றுமைக்கான சிலை: இவரின் நினைவாக குஜராத் மாநிலம்கெவாடியாவில்‘ஒற்றுமைக்கானசிலை'(StatueofUnity)அமைக்கப்பட்டுள்ளது