இசையமைப்பாளர் தேவாமறைவு ..76 வயது ( 1950 – 2026 )
ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மாங்காடு என்ற சிறிய கிராமம் தான் இசையமைப்பாளர் தேவாவின் சொந்த ஊர் என்றாலும் தேவா பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கார சென்னையில் தான். 1950ம் ஆண்டு நவ., 20ல் பிறந்த தேவாவின் நிஜ பெயர் தேவநேசன்சொக்கலிங்கம். சிறுவயதிலேயே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்ட தேவா, காசிமேடு, அயனாவரம் போன்ற சென்னை பகுதிகளில் பாடப்படும் கானா பாடல்களில் நல்ல ஈர்ப்பும் பரிச்சயமும் கொண்டிருந்தார்.நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த காமேஷ் மற்றும் ராஜாமணி ஆகியோரிடம் முதன் முதலில் பணியமர்த்தப்பட்ட தேவா, இசை மீது கொண்ட ஈர்ப்பால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அங்குள்ள ஹார்மோனியத்தை எடுத்து வாசித்து விரைவாக அதையும் கற்றுக் கொண்டார். பின்னாளில் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்த சந்திரபோஸ் உடன் இணைந்து 1973ம் ஆண்டு ‘போஸஸ் தேவா’ என்ற ஒரு இசைக் குழு ஒன்றை ஆரம்பித்தனர்.1977ம் ஆண்டு இந்த இரட்டையர்களுக்கு ‘மதுர கீதம்’ என்ற திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவிர்க்க முடியாதசில காரணங்களால் சந்திரபோஸிடம் இருந்து விலகி தூர்தர்ஷனில் ப்ளோர் அசிஸ்டென்டாக வேலைக்கு சேர்ந்தார் தேவா. அதன்பின் தன்ராஜ்மாஸ்டரிடம் மேற்கத்திய இசையான பியானோவையும், இந்தியன் கிளாஸிக்கல் இசையான ஹார்மோனியத்தை ஜேபி கிருஷ்ணா மாஸ்டரிடமும்கற்றறிந்தார்.பின்னர் 1980களில் தனது இசையில் ஏராளமான பக்திப் பாடல்கள் ஆல்பங்களை வெளியிட்டு வந்தார் தேவா. சினிமாவில் இசையமைக்கும்வாய்ப்புஎல்லோரையும்போல்இவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. ஏறக்குறைய 13 படங்கள் வரைவர்இசையமைப்பாளராகஒப்பந்தமாகி விளம்பரமும் வந்து மேற்கொண்டு தொடராமல் அப்படியே நின்று விடுவதாகவே இருந்து வந்தது. தனது சொந்த பெயரையும் நாடோடி சித்தன், மனோரஞ்சன் என்றெல்லாம் மாற்றி அமைத்தும் பலன் கொடுக்கவில்லை.நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு 1986 ஆம் ஆண்டு நடிகர் வாகை சந்திரசேகர் நடித்து வெளிவந்த ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற திரைப்படம் தான் வெள்ளித்திரையில் தேவா இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். ஆனால் இந்தப் படம் தேவாவிற்கு கை கொடுக்கவில்லை.1989ல்நடிகர்ராமராஜன்நடிப்பில்வெளியான’மனசுக்கேத்தமகராசா’திரைப்படம்தான்தேவாவிற்குஇசையமைப்பாளர் அந்தஸ்த்தை வழங்கியது. அதற்கு அடுத்த ஆண்டான 1990ல் நடிகர் பிரசாந்த் அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தில் தேவாவின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு அவரது திரையிசைப் பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினையும் தேவாவிற்கு தேடித் தந்தது.தொடர்ந்து பெரிய நடிகர்களான பிரபு, சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த தேவாவிற்குஇயக்குநர்கேபாலசந்தரிடம்இருந்துஅழைப்புவந்துஅவரது’கவிதாலயா’நிறுவனத்திற்காகவும்சூப்பர்ஸ்டார்ரஜினிக்காகவும்முதன்முதலாகஇசையமைத்துபிரமாண்டவெற்றியைஈட்டித்தந்தபடமான’அண்ணாமலை’ படத்தின் வாய்ப்பு தேவாவிற்கு கிட்டியது. இந்தப் படத்திலிருந்து தான் ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் டைட்டிலும், தீம் மியூசிக்கும் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.பின்னர் 1995ல் ‘சத்யா மூவீஸ்’ சார்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இமாலய வெற்றி பெற்ற திரைப்படமான ‘பாட்ஷா’ திரைப்படத்திற்கும் இசையமைத்து, தனது திரையிசைப் பயணத்தில் மேலும் ஓர் மகுடம் சூட்டிக் கொண்டார் இசையமைப்பாளர் தேவா. தேவாவிற்கு ‘தேனிசை தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கியவர் மெல்லிசை மாமன்னர் எம்எஸ் விஸ்வநாதன். இரு பெரும் இசை ஜாம்பவான்களான இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இவர்களுக்கு மத்தியில் தனக்கான ஒரு தனி பாணியாக ‘கானா’ பாடல்களை தனது ஒவ்வொரு படத்திலும் இடம் பெறச் செய்து தனக்கான ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றார் தேவா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் ஏறக்குறைய அனைத்து முன்னணி நாயகர்களின் பல வெற்றிப் படங்களுக்கு எண்ணற்றஇனியபாடல்களை தந்த தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார்வட சென்னை மக்களின் முக்கியமான கலைஅடையாளம் கானா பாடல். இதை சினிமாவில் கொண்டு வந்தவர் தேவா. கானா பாடகர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும்இவர்.அவர்கள்வாழ்வில்ஒளியேற்றகாரணமாகஇருந்தவரும்தேவாஎன்றால்மிகையல்ல.இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதேப்போல் அந்த படங்களின் பின்னணி இசையில் இவருக்கு பக்க பலமாய் உறுதுணையாக இருந்தவர்கள் இவரது சகோதரர்களான இசையமைப்பாளர்கள் சபேஷ் மற்றும் முரளி. இவர்கள் தனியாகவும் இசையமைத்துள்ளனர். இவர்களில் சபேஷ் மறைந்துவிட்டார். தேவாவின் இன்னொரு சகோதரரான சம்பத்தும் இசையமைப்பாளர் தான். இவரின் மகனதான் நடிகர் ஜெய் ஆவார். தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவாவும் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார்.இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய் ஆகிய 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தேவா 400 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா 110 படங்களுக்கு இசையமைத்துள்ளார். நிஜ பெயர் : தேவநேசன் சொக்கலிங்கம் சினிமா பெயர் : தேவாபிறப்பு : 20 நவம்பர் 1950 இறப்பு : 17 அக்டோபர் 2026 மகன் : ஸ்ரீகாந்த் தேவா (மகன்) பெற்றோர் : எம்சி சொக்கலிங்கம் – கிருஷ்ணவேணி சகோதரர்கள் : சபேஷ் – முரளி – சம்பத் (சகோதரர்கள்) பட்டம் : ‘தேனிசை தென்றல்’ 1990ல் ‛வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ‘தமிழ்நாடு அரசு சினிமா விருது’ 1992ல் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ 1995ல் ‛ஆசை’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ‘தமிழ்நாடு அரசு சினிமா விருது’ 2000ல் ‛குஷி’படத்திற்காக சிறந்தஇசையமைப்பாளருக்கான ‘தமிழ்நாடு அரசு சினிமா விருது’ சொந்த ஊரில் இன்று (அக்,18) இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.தேனிசைத் தென்றல் தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் விஜய் இசையமைப்பாளர் தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் – கவர்னர் அர்லேக்கர் நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான் – திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இசை அமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.