Others

போதைப்பொருள் புழக்கஅடிமை–அமித்ஷா உறுதி…

Latest Tamil News பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியைச் சேர்ந்த, போதைப்பொருள் விற்பனையை எதிர்த்துப் போராடிய பர்விந்தர் சிங் ஜோட்டா, குல்சார் சிங் மற்றும் பிக்ரம்ஜித் சிங் கொல்லப்பட்டனர். இவர்களது குடும்பத்தினரை அக்டோபர் 20ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசுகிறார்.அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது; பஞ்சாபை போதைப்பொருள் பயன்பாடு எனும் பாதாளத்தில் தள்ளுவதற்கு ஆம் ஆத்மி கட்சி அரசு எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை; பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளன.அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது உயிரிழந்த விக்ரம்ஜித் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்தேன்.இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும். பஞ்சாபில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கமும், போதை கடத்தல்காரர்களின் துணிச்சலும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளன.பகவந்த் மான் தலைமையிலான ஆட்சியில், ஒருபுறம் பஞ்சாப் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். மறுபுறம், இதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.பஞ்சாப் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவையும் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close