fbpx
Others

பரந்தூர்–ஏகனாபுரத்​தில் சமூக நலக் கூடம்– அமைச்​சர் வன்னி அரசு உறு​தி

பரந்தூர் ஏகனாபுரத்தில் சமூக நலக்கூடம் கட்டப்படும்: அமைச்சர் வன்னி அரசு உறுதிவிசிக ஒரு விடு​தலைக்​கான இயக்​கம். அமைச்​சர​வை​யா, சாதி ஒழிப்பு களமா எனக் கேட்​டால் சாதி ஒழிப்பு களம்​தான் முதன்​மை​யானது. அமைச்​சரா, தமி​ழின விடு​தலையா என்று கேட்​டால் தமி​ழின விடு​தலை​தான் எங்​களுக்கு முக்​கி​யம்.அந்த அடிப்​படை​யில்​தான் இந்த அரசை ஆதரித்​து, அமைச்​சர​வை​யில் பங்​கேற்​றுள்​ளோம். அமைச்​சரவை என்​பது எங்​களுக்கு 2-ம் பட்​சம்​தான். தீக்​கிரை​யாக்​கப்​பட்ட குடிசை​களின் சாம்​பலில் இருந்​தும், ஆணவ படு​கொலை​களின் ரத்த சகதி​களில் இருந்து வந்​தவர்​கள் நாங்​கள்.எஸ்​சி, எஸ்டி மக்​கள் அதி​க​மாக வாழும் குடி​யிருப்​பு​களில் சமு​தாயக் கூடங்​கள், பள்​ளிக்​கூடங்​கள், விடு​தி​கள், அடிப்​படை உள்​கட்​டமைப்​பு​கள் என பல்​வேறு நலத் திட்​டங்​களை செயல்​படுத்த அமைச்​சர்​களிடம் இருந்​தும், எம்​எல்​ஏக்​களிடம் இருந்​தும் நூற்​றுக்​கணக்​கான கோரிக்​கை​கள் வந்​துள்​ளன. அவர்​களின் கோரிக்​கை​களை கனிவுடன் பரிசீலித்து தேவைக்​கேற்ப திட்​டங்​கள் விரைந்து செயல்​படுத்​தப்​படும்.விமான நிலைய திட்​டம் கைவிடப்​படும் என்று முதல்​வர் அறி​வித்​துள்​ளார். விமான நிலைய திட்​டத்தை எதிர்த்து மக்​களின் உரிமைக்​காகப் போராட்​டத்தை ஒருங்​கிணைத்து முன்​னெடுத்த போராட்​டக் குழு​வினர் முதல்​வரை சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.விசிக தலை​வர் திரு​மாவளவனை​யும் சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர். நீண்ட கால போராட்​டத்​தி​லிருந்து விடு​தலை கிடைத்​த​தாக முதல்​வரிடம் தெரி​வித்​தனர்.அந்த சந்​திப்​பின்​போது ஏகனாபுரத்​தில் சமூகநலக் கூடம் கட்​டித் தர வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தனர். அவர்​களின் கோரிக்​கையை ஏற்று ஏகனாபுரம் பகு​தி​யில் புதிய சமூகநலக் கூடம் கட்​டித்​ தரப்​படும்​. இவ்​வாறு அமைச்​சர் வன்னி அரசு​ பேசி​னார்​.

Related Articles

Back to top button
Close
Close