fbpx
Others

தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.

*மேலச்சிந்தலைச்சேரிஅரசுமேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்*


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகே உள்ள மேலச்சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பாஸ்கரன், புவனேஸ்வரி வட்டார வளமைய பயிற்றுநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராஜேஷ்வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பள்ளியின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி செயல்பாடுகளில் பெற்றோர்களின் பங்களிப்பு, மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிதனர் மற்றும் அலுவலர்கள், மணிமேகலை, வீரலட்சுமி,ஷர்மிளா உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும் மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது……

 

Related Articles

Back to top button
Close
Close