fbpx
Others

தமிழக காங்​கிரஸ் கமிட்டி புதிய தலை​வ​ராக மாணிக்​கம் தாகூர் நியமனம்…

விசிக தலைவர் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது - மாணிக்கம் தாகூர் | The  remarks made by the VCK leader are surprising – Manickam Tagore.தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது அவரது     செயல்​பாடு​களால் மூத்த தலை​வர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிறது.இதன் காரண​மாக அவர், எந்த நேரத்​தி​லும் மாற்​றப்​படலாம் என்ற பேச்சு எழுந்​தது. பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலை​யில், தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து அகில இந்​திய காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.இதுகுறித்து சத்​தி​யமூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 35 தொகு​தியி​லா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். ஆனால், ப.சிதம்​பரத்தை கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்டு வந்து, தேசி​யத் தலை​மையை 28 இடங்​களுக்கு ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை.செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ்  மேலிடம் மாஸ்டர் பிளான்! | Manickam Tagore: As per sources Manickam Tagore  Likely to Replace ... இதுத​விர, வேட்​பாளர்​கள் தேர்​வில் குளறு​படி நடந்​த​தாக தமிழக மகளிர் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ஹசீனா சையத் கிளப்​பிய குற்​றச்​சாட்டு சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதன் அடிப்​படை​யிலேயே, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்​தது.மாநிலத் தலை​வர் பதவியைக் கைப்​பற்ற கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, செல்​லக்​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோ​ரும் தீவிர​மாக முயற்சி மேற்​கொண்டு வந்​தனர். இந்த நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யின் முழு ஆதர​வுடன் மாநிலத் தலை​வர் பதவியை மாணிக்​கம் தாகூர் கைப்​பற்​றி​யுள்​ளார். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகின்​றன.சிவகங்​கை​யில் பிறந்த மாணிக்​கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அமைப்​பில் (என்​எஸ்​யூஐ) இணைந்​தார். கடந்த 2009, 2019, 2024 மக்​களவை பொதுத் தேர்​தல்​களில் விருதுநகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எம்​.பி.​யா​னார். 2014 பொதுத் தேர்​தலில் இத்​தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார். கட்​சி​யின் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும், பிற மாநிலங்​களின் தேர்​தல் பொறுப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரக் களத்​தில் இருந்தே திமுகவை இவர் கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். முன்​னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விரை​வில் காங்​கிரஸில் இருந்து விலகி திமுக​வில் இணைய உள்​ள​தாக​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

Related Articles

Back to top button
Close
Close