அண்ணாமலை ராஜினாமா…?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.அதை ஏற்காத பாஜக, அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் மூலம் அண்ணாமலையை சமரசம் செய்ய முயன்றது. இதற்காக, 4 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். எனினும், பாஜகவில் இருந்து விலகும் திட்டத்தில் உறுதியாக இருந்த அவர், ஜூன் 5-ம் தேதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,அண்ணாமலையின்ராஜினாமாகடிதத்தைஏற்றுக்கொண்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று காலை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் அறிவிப்பை டெல்லியில் இருந்தவாறே
அண்ணாமலைநேற்றுமதியம்காணொலிவாயிலாகசமூகஊடகங்களில்வெளியிட்டார்.‘‘இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில்போட்டியிடும். நாம் அனைவரும் முட்டாள்தனமான அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். சாமானிய மனிதருக்கான ‘காமன் மேன்’ அரசியலை முன்னிறுத்த வேண்டும். அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும்பயிற்சிஅளிக்கும் வகையில் கோவையில் அப்துல் கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு நிறைய வேட்பாளர்களை இங்கிருந்து நாம் அனுப்புவோம்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.காணொலி வாயிலாக நேரலையில் அவர்வெளியிட்டஇந்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பு,தமிழகஅரசியல்களத்தில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.நேற்று இரவு டெல்லியில்இருந்துசென்னைதிரும்பியஅண்ணாமலையைவரவேற்க,விமானநிலையத்தில்நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரண்டனர். அண்ணாமலைக்கு பூங்கொத்து வழங்கியும், வாழ்த்து முழக்கம் எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதற்கிடையே, தான் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் இணையுமாறு மக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதற்காக, ‘இது நம்ம இயக்கம்’(www.wetheleaders.org) தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் அறிவித்த 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் அவரது இயக்கத்தில் சேரபதிவுசெய்துள்ளனர்.முன்னதாக, பாஜகவில் இருந்துஅண்ணாமலை விலகுவதாக தகவல்வெளிவரத் தொடங்கிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வந்தனர். புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகுவதாக அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.