Others
சுகாதார சீர்கேடுகளை உருவாக்கவா ஆற்காடு நகராட்சி…?
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 27வது வார்டு கார்னர் அரசமரத் தெருவில் தினம்தோறும் கால்வாய் மேல்இருக்கும் குப்பைகளை ஆற்காடு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அள்ளி செல்வது இல்லை. என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மற்றும் பல இடங்களில் குப்பைகள் சாலையோரம் தான் கொட்டப்படுகிறது.இந்த குப்பைகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா? என பன்றிகள் மாடுகள், ஆடுகள் கிளறுவதால் குப்பைகள் சாலையின் மையப்பகுதி வரை சிதறி கிடக்கிறது.இந்த குப்பைகளை அள்ளாததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளுவதற்கு ஆற்காடு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். கண்டுகொள்ளாத ஆற்காடு நகராட்சி!