fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து: ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Train services cancelled

டெல்லி:

எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதெல்லாம், ரயில் சேவை ரத்தும் நீட்டிக்கப்பட்டது.

மே 12-ந் தேதியில் இருந்து ராஜ்தானி ரயில் வழித்தடங்களில் 12 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 1-ந் தேதியில் இருந்து 100 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் ஆகஸ்டு 12-ந் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில்கள் செப்டம்பர் 30-ந் தேதிவரை ரத்து செய்யப்படும் என்றும், சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் 3 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

ஆனால், அதை ரயில்வே நிர்வாகம் மறுத்தது. இந்நிலையில், வழக்கமான ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஊரடங்குக்கு முன்பாக இயக்கப்பட்டு வந்த வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் மறுஉத்தரவு வரும்வரை (காலவரையின்றி) ரத்து செய்யப்படுகிறது. மற்றபடி, தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள், தொடர்ந்து இயக்கப்படும்.

மும்பையில், மாநில அரசின் வேண்டுகோளின்பேரில், அத்யாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பயணம் செய்வதற்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்களுக்கு பயணிகளின் வரவேற்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால், கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close