fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

தொடரும் தடை உத்தரவு எதிரொலி…! தலைமையிடத்தை மாற்ற டிக்டாக் ஆலோசனை!

Tiktok planning to change head office

டெல்லி:

டிக்டாக் தமது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சீனாவை தலைமையிடமாக கொண்ட சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வந்தன. லடாக் பகுதயில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளார். ஹாங்காங்கில் சீனா கடுமையைான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் அங்கும் தனது நடவடிக்கையை வாபஸ் பெற்றுள்ளது டிக் டாக் நிறுவனம்

தடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தன் மீதான களங்கத்தை மாற்றும் விதமாக அதன் தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

மேலும் புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது குறித்தும், உலகம் மழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது அதன் மூலம் பயனாளர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close