fbpx
Others

ஐசிஎஃப் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை..!

chennai ICF

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுசாதனைபடைக்கப்பட்டுள்ளது.1955ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி ஐசிஎஃப் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில்களில் உட்புற பாகங்களை பொருத்தும் தொழிற்சாலையாகஇருந்தது.அதன்பின்னர்ரயில்பெட்டிகள்தயாரிக்கப்பட்டன.  பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் (Integral Coach Factory)இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமாக உள்ளது, பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  கடந்த புதன்கிழமை இங்கு 75 ஆயிரமாவது ரயில்பெட்டி தயாரிக்கப்பட்டது. நேற்று இது தொடர்பாக ஐசிஎஃப் நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.69 ஆண்டுகளில் 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் என்ற சாதனையை ஐசிஎஃப் படைத்துள்ளது. 1957 – 58 காலகட்டங்களில் ஆண்டு ஒன்றுக்கு74 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு 3000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.கொரோனா பொது முடக்கத்துக்குமுன்னர்ஆண்டுஒன்றுக்கு4000ரயில்பெட்டிகள்தயாரிக்கப்பட்டன.அதிகபெட்டிகள்மட்டுமல்லாமல்வெவ்வேறுவகையானவடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 31 ஆயிரத்து349 சாதாரண ஏசி அல்லாத பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.8,152 எல்.எச்.பி. பெட்டிகள் (Non AC), தயாரிக்கப்பட்டுள்ளன. 6,895 எல்.எச்.பி. ஏசி பெட்டிகளும், 752 வந்தே பாரத் சேர் கார் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு 875 பெட்டிகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் தயாரிக்க கூடுதல் ஆர்டர்களை மத்திய அரசு வழங்கும் போது இன்னும் அதிகளவில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்கிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close