தேச ஒற்றுமை பற்றி மோடி பேசியது என்ன ?
சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாள் தினம் இன்று. 2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேச ஒற்றுமை தினம் தீபாவளியுடன் இணைந்து வந்துள்ளது.சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மோடி, “பல நாடுகள் பிரிந்து செல்லும் வேளையில், இந்தியா மேலும் ஒன்றிணைந்து வருகிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, புதிய வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் நமது பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறோம் என்பதை உலகமே கவனித்து வருகிறது. அதனால் நாம் ஒற்றுமையுடன் இருக்கவேண்டியது அவசியம்” என்று பேசியிருந்தார்.மேலும் அவர், “இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் சில மோசமானசக்திகள்இந்தியாவின்வளர்சியைப்பார்த்துகவலைகொள்கின்றனர். அவர்கள் உலகளாவிய முதலீட்டாளர்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டு சேர்க்கின்றனர். தவறான தகவல்களை பிரசாரம் செய்கின்றனர். மக்களை சாதிகளாக பிரித்து, இந்திய சமூகத்தின் ஒற்றுமையை கெடுக்க நினைக்கின்றனர்.
பட்டியலிட்டார் மோடி.ஆதார் – ஒரே நாடு ஒரே அடையாள அட்டை ஜி.எஸ்.டி – ஒரே நாடு ஒரே வரிஆயுஷ்மான் பாரத் – ஒரே நாடு ஒரே ஹெல்த் இன்சூரன்ஸ் மேலும் அவர் இந்த ஒற்றுமையை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பலப்படுத்தும் என்றும் இந்தியா ஒரே நாடு ஒரே சிவில் கோடு என்பதை நோக்கி முன்னேறுவதாகவும் பேசியிருக்கிறார்