தேனி-போடி நகராட்சி ஆணையரிடம் 10 அம்சக் கோரிக்கை….?

தேனி மாவட்டம் போடி நகராட்சி ஆணையரிடம் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் மா. நீலக்கணலன் தலைவர். செ. மாவீரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு. தீபாவளி போனஸ், மழைக்காலங்களில் மழை கோட், ஓய்விடம், தூய்மைப் பணியாளரின் உழைப்பை சுரண்டும் ஒப்பந்தக்காரனின் இடைத்தரவுகளை ரத்து செய்ய கோரி, தூய்மை பணியாளருக்கு நகராட்சியை நேரடியாக ஊதிய வழங்கக்கோரி, தூய்மை பணியாளருக்கு அடையாள அட்டை பிஎஃப் வழங்க கோரி, தூய்மைப் பணியாளருக்கு ஒன்றாம் தேதி சம்பளம் வழங்க கோரி, அனைத்து பணியாளர்களுக்கும் காக்கி ஆடை அணிந்து வர உத்தரவு வழங்ககோரியும், காக்கி ஆடை அணிந்து வரும் வரை பணியாளருக்கு காட்சி ஆடை வழங்குவது ரத்து செய்ய வேண்டும், அதிகாலை 6:00 மணிக்கு பணிக்கு செல்வதால் அனைத்து தூய்மை பணியாளருக்கும் உணவு வழங்கும் வகையில் விடுதி கட்டி தர கோரி, போடி நகராட்சி ஆணையரிடம் 10 அம்சக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.