fbpx
Others

இந்தியர்களுக்கு துபாய் போலீசார் எச்சரிக்கை…..

H-1B Visa Renewal Delays in India Indians with Dubai Residency Can Apply for Stamping in Dubaiஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்குச் செல்கிறார். அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகப்படியானோர் ஐக்கிய அமீரகத்திற்கு, அதிலும் துபாய்க்கு செல்கிறார்கள். நம்மை சுற்றி உள்ளவர்களிலேயே கூட நிச்சயம் சிலர் துபாய் செல்லும் முயற்சிகளில் இறங்கி இருப்பார்கள்.இருப்பினும், சமீப காலமாகவே இதை வைத்து ஒரு மோசடி நடக்கிறதாம். அதாவது உங்களுக்கு துபாயில் வேலை கிடைத்துவிட்டது.. விசாவையும் நாங்களே ரெடி செய்து வருகிறோம் என மெயில் வரும். ஆனால், அப்படி வரும் மெயில் எல்லாமே உண்மை இல்லை. சமீப காலமாகவே துபாயில்வேலைவாங்கிதருகிறோம்,விசாவாங்கிதருகிறோம்எனச்சொல்லிநடக்கும்மோசடிகள்நடந்துவருகிறதாம்.இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இப்போது துபாய் போலீசாரே எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.வேலைதேடுபவர்களைக்குறிவைத்து,சட்டப்பூர்வமற்றமற்றும்மோசடியானவேலைவிசாசலுகைகளைவழங்கி,சிலகும்பல்கள்ஏமாற்றிபணத்தைப்பறித்துவருவதாகதுபாய்போலீசார்கூறுகிறார்கள். இவை அனைத்துமே சட்டவிரோதமானவை என்றும் முறையானசட்டப்பூர்வவழிகளைமட்டுமே விசா மற்றும் வேலைவாய்ப்புக்குப்பின்பற்றுமாறும் துபாய் காவல்துறை வலியுறுத்துகிறது.வேலை விசா பெறுவதற்கு அதிகாரப்பூர்வ அரசு வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உரிமம் பெற்ற ஏஜெண்டுகளை மட்டுமே வேலைக்காகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள துபாய் காவல்துறையின் மோசடி தடுப்பு மையம், அதுவே பாதுகாப்பான வழி என்பதையும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் வேலைவாய்ப்பு குறித்த ஆஃபர்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துபாய் போலீசார் அதிகாரப்பூர்வமாகவே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.மேலும், மோசடிகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போலீசார் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். முதலில் பணத்தை செலுத்தும் முன், வேலை ஆஃபரின் நம்பகத்தன்மையை அதிகாரப்பூர்வ ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு சரிபார்க்கவும். விசா மற்றும் வேலைவாய்ப்பு ஆவணங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்கள்/ அரசு தளங்களை மட்டுமே பயன்படுத்தவும். கண்டிப்பாக விசாவை பெற்றுத் தருவோம் அல்லது குறுக்குவழிகள் துபாய் வர வழிகளை உள்ளன என உறுதியளிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்காவது இதுபோல மோசடியான வேலை அல்லது விசா ஆஃபர் வந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும் துபாய் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப், இ-க்ரைம் தளம் அல்லது 901 மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம். இதுபோல புகார் அளிப்பதன் மூலம் நீங்கள் பிரச்சினையில் மாட்டாமல் தப்பிக்கலாம். மேலும், குற்றவாளிகள் மீது தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் மற்றவர்களும் இந்த மோசடிகளில் ஏமாறுவது தடுக்கப்படும்.

Related Articles

Back to top button
Close
Close