Others
திண்டுக்கல்லில் வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்…
திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சல்பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி,நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், அதன் அருகிலுள்ள பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். உன்னிக்காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.