fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…! உஷ்ணம் அதிகமாகும் என எச்சரிக்கை

Agni started today

சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.

ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயிலானது இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்த வெயில், இன்று தொடங்கி 24 நாட்கள் கொளுத்தும்.

இந்த ஆண்டு வழக்கமாக இருப்பதை விட வெயில் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்றபடி, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே பல நகரங்களில் வெயில் கொளுத்தியது. தலைநகரம் சென்னை, தூங்கா நகரம் மதுரை, மலை கோட்டை நகரான திருச்சி, வேலூர் என பல மாவட்டங்களில் வெயில் வாட்டியது.

Tags

Related Articles

Back to top button
Close
Close