“போடி தவெகவில் பிளவு”….?
“போடி தவெகவில் பிளவு” போடியில் 25வருடமாக ரசிகர் மன்றம், மக்கள் இயக்கதில் உழைத்த நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி மற்றும் ஒன்றிய செயலாளர்களை புறக்கணித்து மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடத்திய மாவட்டச் செயலாளர்ஆர் எஸ் பிரகாஷ் நடவடிக்கையால் தொண்டர்கள் கடும் அதிருப்தி!தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா, போடி பாஸ்கர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை அதிமுக நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஜி. கோபிநாத் தலைமையில் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். பிரகாஷ் மற்றும் மாநிலச் செய்தித் தொடர்பாளர் சௌந்தர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.ஆனால், போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், அவர்களின் அனுமதி மற்றும் ஆலோசனை இன்றியும் இணைப்பு விழா நடத்தப்பட்டது. கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த போடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயப்பிரகாஷுக்கும் உரியமரியாதைஅளிக்கப்படவில்லைஎன்றும்,அவரைக்கண்டுகொள்ளாதவிழாஏற்பாட்டாளர்களின் செயலால் மனவேதனையடைந்த ஒன்றிய நிர்வாகிகள் சிலர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும், அவருக்கு உரிய அழைப்பு மற்றும் தகவல் வழங்கப்படாததே இதற்குக் காரணமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.கட்சியின் ஆரம்பகாலம் முதல் தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைத்து வரும் உண்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை என்ற மனக்குமுறல் தற்போது போடி நகரம் மட்டுமின்றி போடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, மாவட்டச் செயலாளரின் இத்தகைய நடவடிக்கைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே மன உளைச்சலையும் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. கட்சிக்காக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, ஒரு சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு அதன் அடிமட்டத் தொண்டர்களும், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளும் முதுகெலும்பாக இருக்கும்போது, அவர்களுக்குள் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இல்லாமல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவது கட்சியின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் மாவட்டத் தலைமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், கட்சிக்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் போடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தப் பிரச்சினைக்கு கட்சியின் தலைவர், தமிழகத்தின் நம்பிக்கைத் தலைவர் விஜய் அவர்கள் உரிய முடிவெடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே அதிருப்தியில் உள்ள தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.