ஊழல் குற்றச்சாட்டால் கோபம்…! பாஜக பிரமுகரை அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ மீது வழக்கு!
Case filed against Madurai dmk mla moorthy

மதுரை:
மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊமச்சிகுளத்தை சேர்ந்த பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டியன். அவரது வீட்டுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி தாக்க முயன்றுள்ளார்.
ஊழல் செய்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக சத்தம் போட்டு சங்கரபாண்டியனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்ற, எம்எல்ஏ மூர்த்தி சங்கரபாண்டியையும் அவரது மனைவியும் காலணியால் தாக்க முயன்று இருக்கிறார்.
இந்த சம்பவம் சங்கரபாண்டியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. பின்னர் அவை சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சங்கரபாண்டியன் புகார் அளித்தார். அதன் பேரில் மூர்த்தி மீது ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
















