fbpx
Others

நீடாமங்கலம்-அரசுப் பள்ளியில் மாடித்தோட்டம் அமைக்கும் நிகழ்வு

நீடாமங்கலம் ஜூன் 25
நீடாமங்கலம் அருகே அகர பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் மாடி தோட்டம் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார் .பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதிகா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பகுருதீன் அகமது பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் வினைதா பேகம் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பள்ளியில் மாடித்தோட்டம் அமைக்கும் நிகழ்வை நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி அவர்கள் துவங்கி வைத்து மாடி தோட்டத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதீஷ் பாபு மாடித்தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்களை வழங்கி மாடித்தோட்டம் மிகவும் பயனுள்ள ஒன்றாகும் , மேலும் மாணவர்களுக்கு விவசாயம் பற்றியும் காய்கறிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக மாடித்தோட்டம் வழிவகுக்கும் என்றும் மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லா காய்கறிகளை தயார் செய்து சமையலுக்கு பயன்படுத்தி பயன்பெறலாம் என்றும் வீட்டு மாடியில் இந்த நிகழ்வை ஏற்படுத்தி எளிய முறையில் வருமானம் ஈட்டலாம் என்றும் கூறி மாடி தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சியினை வழங்கினர். பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜேஷ் குமார் ஆகியோர் பள்ளி மாணவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளும் விதமாக தினசரி நாளிதழ் வழங்கி மாணவர்களிடம் உரையாற்றினர். முன்னதாக பட்டதாரிஆசிரியர் சுந்தரி வரவேற்றார் இடைநிலை ஆசிரியர் சுமதி நன்றி உரையாற்றினார். பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் நிகழ்வில் பங்கேற்று மாடித்தோட்டம் பற்றிய பயிற்சிகளை தெரிந்து நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர் .

Related Articles

Back to top button
Close
Close