fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புக்கு மொபைல் இல்லாததால் ஏமாற்றம்…! பள்ளி மாணவி தற்கொலை!

School girl suicide for not having mobile phone

திண்டுக்கல்:

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல் இல்லாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நாயிடுபுரம் பகுதியை சார்ந்தவர் சண்முக பிரியா. இவர் அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா காரணமாக இணையம் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அந்த வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவியிடம் உரிய மொபைல் இல்லாததால் தன் தந்தையிடம் மொபைல் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரால் அதை வாங்கித்தர இயலவில்லை.

தன்னால் படிக்கமுடியவில்லை என்கிற வருத்தத்தில் இருந்த மாணவி வீட்டில் இருந்த மருந்தை குடித்துள்ளார். இதனை கண்ட அருகிலுள்ளவர்கள் இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close