தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு…

திருவள்ளூர்மாவட்டம்,நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஜி.என்.டி.சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பேரூந்து நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு கலைஞர் நகர்ப்புறமேம்பாடு திட்டத்தின்கீழ்ரூ.250.00இலட்சம்மதிப்பீட்டில்மேம்பாடுபணிகள்நடைபெறுவதைபார்வையிட்டுபணிகள்விரைந்துமுடிக்கவேண்டும்என்றுஅதிகாரிகளிடம்தெரிவித்தார்.மேலும் 2024-2025 ஆம் ஆண்டு 15வது நிதி குழு ஆணையத்தின் சுகாதார மான்யத் திட்டத்தில் அறிஞர் அண்ணா பார்க் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலையம் கட்டிடத்தை பார்வையிட்டார்.மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பாட்டில் வார்டு எண்.2-ல் அமைந்துள்ள சோத்துப்பாக்கம் சாலை சர்வே எண்.90/2-ல் வளமீட்பு பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளிலிருந்து உரம் தயாரித்தல் மற்றும் குப்பைகளை கையாளுதல் பணிகளை சீரிய முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் வளமீட்பு பூங்காவினை மேலும் சிறப்பாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். பேரூராட்சிகளின் இணை இயக்குநர் (திட்டம்) காளியப்பன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயகுமார், உதவி செயற் பொறியாளர் சரவணன், செயல் அலுவலர் அ.அபுபக்கர், பேரூராட்சி மன்றத்தலைவர்தமிழரசிகுமார்,துணைத்தலைவர் விப்ரநாராயணன், இளநிலை பொறியாளர் முத்து மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடனிருந்தனர்.