fbpx
RETamil NewsTechnologyஉலகம்

மொபைல் போன் விளையாட்டின் அடிமைத்தனத்தால் நேர்ந்த விபரீதம் !!

2018-ஆம் ஆண்டு PUBG PUBG என்று அழைக்கப்படும் வீரர் தெரியாத போர் மைதானம் என்ற விளையாட்டு அறிமுகமானது.இந்த விளையாட்டு முக்கியமாக ஸ்மார்ட் போன்களில் மட்டும் விளையாடக்கூடியதாகும். உலகம் முழுவதும் உள்ள 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்

இந்நிலையில் உடல்பயிற்சி ஆலோசகர் ஒருவர் இந்த விளையாட்டிற்கு அடிமையானதால் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவில் , ஜம்முவை சேர்ந்தவர் அந்த உடல்பயிற்சி ஆலோசகர் அவர் 10 நாட்களுக்கு முன் அவரது ஸ்மார்ட் போனில் PUBG PUBG என்ற விளையாட்டை இன்ஸ்டால் செய்தார்.முதல் முறையாக இன்ஸ்டால் செய்த அவருக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் கடந்த 10 நாட்களாக சிறிது கூட ஓய்வும் இல்லாமல் விளையாடியுள்ளார்.இதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர் தன்னையே தாக்கிக்கொண்டுள்ளார்.

இதனை கண்டறிந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PUBG PUBG என்ற விளையாட்டால் பிரச்சனை உண்டாகும் சம்பவம் ஜம்முவில் தொடர்ந்து பல முறை நடந்து வருவதால் , தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்க ,அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close