
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகவே ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிடித்து வைத்த மீனை கூட விற்க முடியாத அவல நிலையில் உள்ளனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மூன்று வேளை உணவில் இருந்து இரண்டு வேளை உணவிற்கு கூட அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுனாமி, வர்தா புயல், கஜா புயல் ஆகிய இயற்கை பேரிடர்களை எல்லாம் சமாளித்து வந்த தங்களுக்கு இந்தக் கொரோனாவை சமாளிக்க எங்களிடம் சக்தி இல்லை என்று புலம்பித் தவிக்கின்றனர்.
ஊரடங்கிற்கு பின்பு 2 வேளை உணவு மட்டும்தான் உண்கிறோம், 3 வேளை உணவை கூட பார்த்ததில்லை என்று மிகவும் ஏக்கத்துடன் கூறுகின்றனர்.
மக்களுக்கு உணவளிக்கும் அம்மா உணவகத்திற்கு கூட தற்போது விடுவதில்லை என்று புலம்புகின்றனர். இந்த அவல நிலையிலிருந்து மீளும் நாளை நோக்கி எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறுகின்றனர்.
மே 3 க்கு பிறகு ஊரடங்கு தொடரும் என்று கூறுகின்றனர், அவ்வாறு நேர்ந்தால் தற்போது உண்ணும் இரண்டு வேளை உணவு கூட மாறும் என்று கூறி வருந்துகின்றனர்.
ஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், மீனவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.















