fbpx
GeneralRETamil Newsஇந்தியா

மகிழ்ச்சி…! ரூ.49க்கு கொரோனா சிகிச்சை மாத்திரையை வினியோகிக்கும் முன்னணி நிறுவனம்!

New corona cure tablet at price rs. 49

டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு 49 ரூபாய்க்கு பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை லூபின் மருந்து நிறுவனம் தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடித்து, விற்பனைக்கு வரவில்லை. பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவன்சாவுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரை தரப்படுகிறது. இது வைரஸ் நகலெடுப்பை தடுக்கிற ஆர்.என்.ஏ. பாலிமரேசை தேர்ந்தெடுப்பதை தடுக்கிறது.

இந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க லூபின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த மாத்திரை ஒன்று ரூ.49 என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது. மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது.

சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பேபிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close