fbpx
OthersRETamil Newsஅரசியல்இந்தியா

இந்தியாவில் புதியதாக 14516 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Nearly 14500 new corona cases in india

டெல்லி:

இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 14,516 பேர் புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 14,516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 375 பேர் உயிரிழந்துள்ளனர்.

12,948 பேர் உயிரிழக்க 21,3831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124,331 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

5893 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 54,449 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 666 பேர் பலியாக, 30,271 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3வது இடத்தில் உள்ளது. 53,116 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2035 பேர் உயிரிழக்க, 23,569 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close