மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி….
ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சி
கோவை; தமிழ்நாடு தெற்கு ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், கோவையில் வரும், 24, 25ம் தேதிகளில் மாநில அளவில் பாலவிகாஸ் மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிநடக்கிறது .தமிழ்நாடு தெற்கு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஆண்டுதோறும் பாலவிகாஸ் மாணவர்களுக்கான திறன் தேடல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். 5முதல்13வயதுகுழந்தைகளுக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்பர். மாநில அளவிலான போட்டிக்காக, இரண்டு நாள்முகாம்நடத்தப்படுகிறது; 750 குழந்தைகள் பங்கேற்க இருக்கின்றனர். 33 பிரிவுகளில் தனிப்பட்டமற்றும்குழுபோட்டிகள்நடத்தப்படஉள்ளன.உரையாடல், ஓவியம் வரைவது, பக்தி பாடல்கள் மற்றும் வேத மந்திரங்கள் பாடுவது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் பாடத்திட்டம் அடிப்படையிலான தலைப்புகளில் பாடல்கள் பாடுவது போன்றவை அடங்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.கோவை, நவ இந்தியா அருகே ஆவராம்பாளையம் ரோட்டில், எஸ்.என்.ஆர்., அரங்கத்தில் வரும், 24 மற்றும், 25ம் தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்களின் கோவை மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன், ஒருங்கிணைப்பாளர்கள் கிரிஜா மேனன், உதயகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.