fbpx
RETechnology

ஜூம் ஆப் (zoom app) குறித்து உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

ஜூம் ஆப் (zoom app) பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்த இடத்திலிருந்தே காணொலி காட்சி மூலம் தங்களின் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதற்காக ஜூம் ஆப்(zoom app) போன்ற வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனைக் கொண்டே அரசு நிர்வாகம் தற்போது இயங்கி வருகிறது.

இந்நிலையில் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள ஜூம் ஆப் வீடியோ கான்ஃபெரன்சிங் பயன்பாடு, தனி நபர் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆகவே அதனை மூன்றாம் தனிநபர்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது எனக் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் அல்லது சைகார்ட் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இது தனி நபர்களுக்கானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைகார்ட் என்பது சைபர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சட்ட அமலாக்க நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியினால் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது.

மேலும் ஜூம் ஆப் (zoom app) பயன்படுத்தும் தனியார் நபர்களை உள்துறை அமைச்சகம் சில  முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜூம் ஆப்-ஐ பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடும்.

மேலும் உங்களது நிறுவனம் சார்ந்த தரவுகளை  களவாடக் கூடும் என்றும் சி.இ.ஆர்.டி-இன் எச்சரித்துள்ளது.

ஹேக்கர்கள் இதனை ஒரு டாஸ்க் போல செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஜூம் ஆப் (zoom app) தரவுகளை 0.25 பைசாவுக்கு விற்றுவிட்டார்கள் என்ற புகார் வந்து மிகப்பெரும் சர்ச்சையாகியது நினைவிருக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close