fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கொரோனா தடுப்பூசி நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்..! வெளியான புதிய அறிவிப்பு!

Corona vaccine November in india

டெல்லி:

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசி ரூ. 1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி சோதனை செய்துள்ளது. இங்கிலாந்து அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அந்த நிறுவணம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது. இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு  சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும்.

அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறினார்.

ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close