fbpx
Others

தமிழ்நாடு சிலம்பம் பேரவை கோரிக்கை….

சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க தமிழ்நாடு சிலம்பம் பேரவைகோரிக்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரிடம் நேரில் மனு!!தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தை சிலம்பம் 1980 ஆம் ஆண்டில் பெற்றது.அதன் கீழ் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சுமார் 40 ஆண்டுகள் போட்டிகளை நடத்தியது.பல்வேறு மோசடி, குளறுபடி காரணமாக அந்த அமைப்பிற்கு 2019 ஆம் ஆண்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.தற்போதுவேறுஎந்தஅமைப்பிற்கும்அங்கீகாரம்வழங்கப்படவில்லை.தமிழ்நாடு அரசு நடத்துகின்ற பள்ளி விளையாட்டு மற்றும் முதல்வர் கோப்பை விளையாட்டுகளில் சிலம்பம் போட்டி நடைபெறுகிறது.அதற்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் மூலம் எந்த விதமான சலுகைகளும், பலன்களும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாக இருக்கிறது.தற்போது மாணவர்கள் சிலம்பம் மூலமாக எந்த பலனையும் பெற முடியாத நிலை இருந்து வருகிறது .அதனால் அரசாங்கம் சிலம்ப வளர்ச்சி வாரியம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கி அனைத்து சிலம்ப அமைப்புகளையும்ஒருங்கிணைத்துவாரியத்தின்செயல்பாட்டோடு இணைந்து செயல்பட செய்ய வேண்டும்.தமிழ் பாரம்பரிய விளையாட்டு என்பதாலும் 1980 முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரம் பெற்ற விளையாட்டு என்பதாலும் தனி அக்கறை செலுத்தி இந்த விளையாட்டை இந்திய முழுவதும் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,மேலும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு(2024) ஜனவரியில் நடைபெற்ற கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் டெமோ செய்யப்பட்டது.போட்டியில் விளையாடப்படவில்லை.இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.என்ற விவரங்களை தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பாக மனுவாக தயார் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி அவர்களிடம்தமிழ்நாடு சிலம்பம் பேரவை கௌரவ தலைவர் .முருகக்கனி, தலைவர். ஈசன் நேரில் வழங்கினர் அவர்களுடன் நிர்வாகிகள் ராஜேந்திரன் கஜேந்திரன், சரவணன், நந்தகுமார், நாமக்கல் மஞ்சு பார்கவி ஆகியோர் இருந்தனர்.முதல்வர் கோப்பை மற்றும் பள்ளி விளையாட்டு போட்டிகளை நேர்மையாக, நல்ல முறையில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .நடுவர் பணிக்கு தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் நடுவர்களை நியமித்து தர வேண்டும். நாங்கள் சிறப்பாக நடத்தி தருகிறோம்..என்று கோரிக்கையில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று தலைவர். ஈசன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close