fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

60 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பலி…! இது பிரேசில் துயரம்!

Brazil crosses 60000 corona causalities

பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் மட்டும் 60 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 43 லட்சத்து 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 968 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 18 ஆயிரத்து 46 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசிலில் 60 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close