தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம்….
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுஉத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். * காஞ்சிபுரம் மாவட்டஆட்சியராகஇருந்தகலைச்செல்விபொருளியல்மற்றும்புள்ளியியல்இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்.பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.செங்கல்பட்டுமாவட்டஆட்சியராகஇருந்தசினேகாகாஞ்சிபுரம்மாவட்டஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். * மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர்சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். * ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். * ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடுவணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.