fbpx
Others

கோவை— கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு… 

கோவை மாவட்டம்  வால்பாறையில் கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு  இன்று காலை சுமார் 11 மணி அளவில் கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் இன்பச் சுற்றுலாவாக பயணிகளுடன் வால்பாறை வந்தடைந்தனர். இயற்கை வளமும் மலைப்பாங்கான காட்சிகளும் நிறைந்த வால்பாறை சுற்றுலா தலத்தை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் அமைப்புகள் இணைந்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு,வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு,தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம்,ஹோட்டல் உரிமையாளர்கள்,கார் மற்றும் வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம்ஆகியோர் ஒருங்கிணைந்து கலந்து கொண்டனர்.வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வால்பாறை பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு உள்ளூர் அமைப்புகள் வழங்கும் ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்துவதாக அமைந்தது.மேலும், வால்பாறை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்திலும் இதுபோன்ற ஒத்துழைப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அமைப்பினர்கள் தெரிவித்தனர்.இந்த வரவேற்பு நிகழ்வு சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியையும் நல்ல வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ். தே

Related Articles

Back to top button
Close
Close